வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் நாசர் மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில் அமைச்சர் நாசரை ஆதரித்து இன்று (08/04/2026) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவடி மாநகராட்சி அருகில் பரப்புரை செய்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் மத்தியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் நாசரை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் என ஆவடி தொகுதி வாக்காளர்களிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள்,மோர் பாக்கெட்,பிஸ்கட் பாக்கெட் ஆகியவைகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை முடித்து சென்றவுடன் கட்சியினர் அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா சாலையில் சிதறி கிடந்த தண்ணீர் பாட்டில்கள்,மோர் பாக்கெட் கவர்கள் உள்ளிட்ட குப்பைகளை அவரே துடைப்பம் எடுத்து சுத்தம் செய்தார். அவர் சுத்தம் செய்வதை பார்த்த கட்சியினர் சிலரும் அவருடன் சேர்ந்து சாலையை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.

அமைச்சரின் மகன் செய்த இந்நிகழ்வை பார்த்த திமுகவினர் நெகிழ்ந்தனர்….




