
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மேல்மாநகரை சேர்ந்தவர் அப்பு (எ)தமிழரசு, சிறந்த கால்பந்தாட்ட வீரரான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கால்பந்தாட்டம் மூலம் விளையாட்டு வீரர் பிரிவில் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.இந்நிலையில் இவரை பாராட்டும் விதமாக நேற்று (1/03/2026)மேல்மாநகரில் அமைந்துள்ள அம்பேத்கர் கால்பந்தாட்ட மைதானத்தில் பாராட்டு விழா நடைப்பெற்றது

இந்த பாராட்டு விழாவில் பூந்தமல்லி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பலராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று தமிழரசுவை பாராட்டி பேசினர்.பின்னர் தமிழரசுக்கு பரிசு வழங்கப்பட்டது…….





