பூந்தமல்லி 1வது வார்டில் தவெகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காண்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பூந்தமல்லி 1 வது வார்டு மேல்மாநகரில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் களம் காணும் குட்டி (எ) பிரகாசத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் தவெகவினர் ஈடுப்பட்டனர்.

ஆண்கள் பெண்கள் என 300 க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் வீதி வீதியாக சென்று தவெக வேட்பாளர் பிரகாசத்திற்கு விசில் சின்னத்தில் வாக்கு செலுத்துமாறு கோரினர்..

குறிப்பாக பஜனை கோவில் தெரு,மாரியம்மன் கோவில் தெரு,படவட்டம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட தவெகவினர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக வந்தால் நிச்சயம் ஊழல் அற்ற ஆட்சியை தருவார் என கூறினர்….

வாக்கு கேட்பு நிகழ்ச்சியில் முக்கிய நகர நிர்வாகிகள்,வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ….

  • Related Posts

    அமைச்சர் நாசரின் மகன் செய்த செயல் -திமுகவினர் நெகிழ்ச்சி

    வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் நாசர் மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்நிலையில் அமைச்சர் நாசரை ஆதரித்து இன்று (08/04/2026) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆவடி மாநகராட்சி அருகில் பரப்புரை செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் மத்தியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்…

    பூந்தமல்லி மேல்மாநகர் பகுதியில் திமுக கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

    தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் வாக்களர்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று (05/04/2026) பூந்தமல்லி 1 வது வார்டு மேல்மாநகர் பகுதியில் பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளரான கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *