திருவள்ளூர் மாவட்டத்தில் மிக முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பூந்தமல்லி தொகுதியை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என திமுகவினர் போட்டி போட்டு கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

2026 இல் எப்படியாவது சீட் பெற்று விட வேண்டும் என்ற ரேசில் மூன்று பேர் தீவிரமாக ஓடி வருகின்றனர்..

சிட்டிங் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி திமுக தலைமையிடமே நேரடியாக சீட் பெறுவதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார். தான் தொகுதிக்கு நிறைய செய்து இருப்பதாகவும் இது வரை இரண்டு முறை சீட் பெற்று இரண்டு முறையும் வெற்றி பெற்றிருப்பதால் தனக்கு இந்த முறையும் சீட் தர வேண்டும் என முறையிட்டு வருகிறார்..

ஆனால் இவருக்கும் மாவட்ட செயலாளர் சா.மு.நாசருக்கும் பணிபோர் நிலவி வருவதால் இவருக்கு சீட் கிடைப்பதில் நாசர் தடுப்புசுவராக இருப்பார் என சொல்லபடுகிறது

அடுத்ததாக திருவள்ளூர் மத்திய மாவட்ட துணை செயலாளராக இருக்கும் காயத்ரி ஸ்ரீதர் எப்படியாக இந்த முறை சீட் பெற்று விட வேண்டும் என முழு வீச்சில் வேலை செய்து வருகிறார்.அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பென்ஜமின் இவருக்கு சம்மந்தி முறை என்பதால் இவருக்கு சீட் கிடைத்தால் அதிமுகவும் மறைமுகமாக இவருக்கு வேலை செய்யும் என கூறுகிறார்கள் உடன்பிறப்புக்கள்

இறுதியாக மாவட்ட பொருளாளர் நரேஷ் தன் பங்குக்கு சீட் பெறுவதில் ஆர்வம் காட்டி வருவதால் இந்த முறை யாருக்கு சீட் பெறும் யோகம் இருக்கும் என உறுதியாக தெரியவில்லை…

(யாருக்கு சீட் கிடைத்தாலும் கட்சிக்காக உழைத்து உழைத்து தேயும் எங்களுக்கு யாரும் எதுவும் செய்யவில்லை என புலம்பியடி கடந்து சென்றார் உடன்பிறப்பு ஒருவர்)