தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் வாக்களர்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று (05/04/2026) பூந்தமல்லி 1 வது வார்டு மேல்மாநகர் பகுதியில் பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளரான கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். 1 வது வார்டு வட்ட செயலாளர் சுகுமாறன் ஏற்பாட்டில் நடந்த இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் பூந்தமல்லி திமுக நகரசெயலாளர் G.R. திருமலை மற்றும் திமுக, கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திறந்த வெளி வாகனத்தில் தொண்டர் படை சூழ வாக்கு சேகரித்து வந்த கிருஷ்ணசாமிக்கு பூவை நகர இளைஞரணியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெய் பிரம்மாண்ட மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதை தொடர்ந்து 1 வது வார்டு திமுக நிர்வாகியான ஆகாஷ் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்…




